மைதானத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர் !
Wednesday, March 28th, 2018
குரோஷியாவில் நடைபெற்ற டிவிசன் கால்பந்து போட்டியின் போது மார்பின் மீது பந்து பட்டதால் Bruno Boban மைதானத்திலேயே அதிர்ச்சி மரணமடைந்தார்.
குரோஷியாவில் உள்ள உள்ளூர் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டிவிசன் கால்பந்து தொடரில் Marsonia மற்றும் Slavonija Pozega அணிகள் விளையாடின.
இதில் போட்டியின் போது Marsonia அணி வீரர் Bruno Boban மார்பின் மீது பந்து பட்டது. காயம் ஏதுமின்றி தொடர்ந்து போட்டியில் விளையாடிய அவர் மைதானத்திலேயே விழுந்தார் பின், போட்டியை நிறுத்தி அவரை பார்த்த நடுவர் அசைவு ஏதுமின்றி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின், மைதானத்திற்குள் வந்த அனைத்து வீரர்களும் அவருக்கு முதலுதவி அளித்த போதும், அவர் மூச்சு ஏதும் விடாமல் இருந்தார். சுமார் 40 நிமிடங்களுக்கும் மேல் முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
மைதானத்தில் விழுந்த அவர் திடீரென மரணமடைந்தார். இதனைக்கண்ட சக வீரர்கள் மைதானத்திலேயே அதிர்ந்து போனர். பின், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போட்டியின் போது, பந்து பட்டு திடீரென வீரர் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
|
|