மைதானத்தில் இராணுவ தொப்பியுடன் இந்திய வீரர்கள் – ICC இடம் முறையிட்டது பாகிஸ்தான்!

Tuesday, March 12th, 2019

கிரிக்கெட் விளையாடும் போது இந்திய வீரர்கள் இராணுவ தொப்பி அணிந்தது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான்அமைச்சகம் முறைப்பாடு வழங்கியுள்ளதோடு, அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் இறந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் அவுஸ்திரேலியாவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது இராணுவ வீரர்கள் அணியும் தொப்பியை அணிந்து விளையாடினர்.

மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் கிடைக்கும் ஊதியமும் இறந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்வும் இந்திய அணியினர் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், இந்திய அணியினர் இராணுவ தொப்பி அணிந்து கிரிக்கெட் விளையாடியதை பாகிஸ்தான் அமைச்சர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எனவே, இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.