மைதானத்தில் அடித்து கொல்லப்பட்ட கிரிக்கெட் வீரர்!!

Thursday, July 21st, 2016

டெல்லியில் 20 வயதான கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலே மர்ம கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இந்த இளம் கிரிக்கெட் வீரருக்கும் ஒரு ரவுடி கும்பலுக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த யூலை 12ம் திகதி அவர்கள் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது மைதானத்திற்கு நுழைந்த ஒரு கும்பல் ஹொக்கி மட்டை, இரும்பு கம்பி ஆகியவற்றால் அவரை அடித்து கொலை செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் பொலிசார் எடுக்கவில்லை. 3 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சம்பவத்தில் 10 பேருக்கும் அதிகமானோருக்கு தொடர்புள்ளதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் இது போன்ற ரவுடி கும்பலின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. ஆனால் டெல்லி பொலிசார் அவர்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

Related posts: