மே.இந்திய தொடரில் சஞ்சு சாம்சன்!

Thursday, November 28th, 2019

இந்திய அணி வீரர் ஷிகர் தவான் உபாதைக்கு உள்ளாகியுள்ளமை காரணமாக, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள 20 க்கு 20 தொடருக்கான இந்திய அணி குழாமில் சஞ்சு சாம்சன் இணைக்கப்பட்டுள்ளார.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இன்று இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இடம்பெறும் உள்ளுர் போட்டியொன்றின்போது, ஷிகர் தவானின் இடது முழங்காலில் உபாதை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர் உபாதையிலிருந்து மீள்வதற்கு சிறிது காலமாகும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் மருத்துவர் குழாம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள 20 க்கு 20 தொடரில் ஷிகர் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் இந்திய அணி குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

மூன்று 20 க்கு 20 மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: