மேல்முறையீடு செய்கிறார் டுபிளசி!

Friday, November 25th, 2016

பந்தில் செயற்கை திரவத்தை தடவியதற்கான வழக்கினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளிசி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் முடிவு பெற்ற நிலையில், தென் ஆப்பிரிக்க அணி வெற்றி வாய்ப்பை தட்டி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் ஹோபர்ட்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் டுபிளிசி பந்து வீசும் பொழுது பந்தில் செயற்கை திரவம் தடவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை விசாரித்த ஐ.சி.சி பந்தில் செயற்கையான திரவத்தை தடவியதை உறுதி செய்தது. இதையடுத்து டுபிளிசிக்கு போட்டிச் சம்பளத்தில் 100 சதவீதம் அபராதமும், 3 டிமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டது.

இதனால் அடுத்த இரண்டு வருடத்தில் 1 டுமெரிட் புள்ளியோ அல்லது அதற்கு மேலோ பெற்றால் ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் அல்லது 2 டி-20 இதில் எது முதலில் வருகிறதோ, அதில் பங்கேற்க தடைவிதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், டுபிளசி எந்த தவறும் செய்யவில்லை என்பதில் உறுதியாக உள்ளார், அவருக்கு தேவையான எல்லா உதவிகளும் கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா செய்யும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: