மேலுமொரு சாதனை ரங்கன ஹேரத் வசமானது!

Thursday, November 10th, 2016

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரும் , சிம்பாவே தொடரில் இலங்கை அணியை வழிநடத்தும் ஹேரத் இந்த ஆண்டில் அதிகமான டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 7 ஆட்டங்களில் 44 விக்கெட்டுக்களை வீழ்த்திய அஸ்வினை பின்தள்ளி, தனது 8 வது டெஸ்டில் 46 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹேரத் முதலிடத்தை தனதாக்கினார்.

அத்தோடு டெஸ்ட் விளையாடும் அனைத்து நாட்டு அணிகளுக்கும் எதிராகவும் 5 விக்கெட் பெறுதிகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் முரளிதரன், டேல் ஸ்டெயின் ஆகியோருக்கு அடுத்து ஹேரத்தும் இணைந்து கொண்டார்.

received_10210961924633635

Related posts: