மேற்கு இந்திய ஒருநாள் தொடரிலிருந்து  யுவராஜ், ரெய்னா நீக்கம்!

Saturday, August 13th, 2016

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக , இம்மாதம் 27, 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இரண்டு, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிக்கான குழாமிலிருந்து யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹார்டிக் பாண்டியா, பவான் நீகி, ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, மனிஷ் பாண்டே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன் டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் குழாமுக்கு மேலதிகமாக,  இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் அணித்தலைவரான மகேந்திர சிங் டோணி, வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிறிட் பும்ரா, சகலதுறை வீரர் ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரே மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, முரளி விஜய், செட்டேஸ்வர் புஜாரா, ஷர்டுல் தாக்கர், இஷாந் ஷர்மா, ரித்திமான் சகா ஆகியோர் டெஸ்ட் போட்டியின் முடிவில் திரும்பவுள்ளனர்.

குழாம்: மகேந்திர சிங் டோனி, ரோஹித் ஷர்மா, ஷீகர் தவான், விராத் கோலி, அஜின்கியா ரஹானே, லோகேஷ் ராகுல், இரவீந்திர ஜடேஜா, இரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிறிட் பும்ரா, மொஹமகட் ஷமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், அமித் மிஷ்ரா, ஸ்டூவர்ட் பின்னி

Related posts: