மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
Saturday, June 1st, 2019தொடரின் 2 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி, 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதனூடாக, உலகக் கிண்ணத் தொடரில் தனது இரண்டாவது ஆகக் குறைந்த ஓட்டத்தை பாகிஸ்தான் அணி பதிவு செய்துள்ளது.
முன்னதாக, 1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 40.2 ஓவர்களில் 74 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்திருந்தது.
இதுவே, பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத் தொடரில் பெற்றுக்கொண்ட ஆகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது.
உலகக் கிண்ணத் தொடரில் ஆகக் குறைந்த ஓட்டங்களைப் பெற்ற அணியான கனடா அணி உள்ளது.
கடந்த 2003 ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில், இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் கனடா அணி, 18.4 ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தமை ஆகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக உள்ளது.
அந்தப் போட்டியில், இலங்கை அணி, 9 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|