மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

Monday, March 15th, 2021

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானத்து.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 80 ஓட்டங்களையும் அஷேன் பண்டார 55 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொணடனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பாக டெரன் பிராவே 102 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

அதன்படி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 3 க்கு 0 என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

Related posts: