மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி!

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது
அதன்படி, அந்த அணி 37.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்றது
பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 39.2 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப்பெற்றது
இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
Related posts:
இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி நேரத்தில் மாற்றம்!
உரிய இலக்கை நோக்கி பயணிக்க மனக்கட்டுப்பாட்டு அவசியம் - மகேந்திர சிங் தோனி!
இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்ஸன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!
|
|