மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தோல்வி குறித்து கோஹ்லி!

Tuesday, July 4th, 2017

முக்கியமான நேரத்தில் விக்கெட்டை இழந்தோம் என தோல்வி குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி  தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் தோல்வி குறித்து விராட் கோஹ்லி  இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில் ”எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இதனால்  மேற்கிந்திய தீவுகள் 189 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி விட்டோம். ஆனால் துடுப்பாட்டம் தான் சரியாக அமையவில்லை.

மிகவும் இக்கட்டான நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சும்இ களத்தடுப்பும் சிறப்பாக இருந்தது.இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். பாராட்டு எல்லாம் அவர்களை தான் சாரும். அடுத்தப்போட்டியில் புதிய புத்துணர்வுடன் விளையாடுவோம்” என்றார்.

Related posts: