மேற்கிந்திய கிரிக்கட் சபைக்கு எதிராக வழக்கு – வெற்றிபெற்ற பயிற்றுவிப்பாளர்!

Tuesday, March 19th, 2019

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணிக்கான முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஃபில் சைமன்ஸ், மேற்கிந்திய கிரிக்கட் சபைக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் வெற்றிபெற்றுள்ளார்.

அவர் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென பதவி நீக்கப்பட்டார். அணித்தெரிவில் ஏற்பட்ட முரண்பாடே அவரது பதவி நீக்கத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிராக அவர் அன்டிகுவா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்ததுடன், நட்டஈடாக 3 லட்சம் அமெரிக்க டொலர்களை கோரி இருந்தார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை நீதிமன்றில் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளதுடன், அவர் கோரிய நட்டஈட்டையும், வழக்கு செலவுகளையும் சேர்த்து 4 லட்சம் டொலர்களை செலுத்த இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த வழக்குத் தீர்ப்பானது, மேற்கிந்திய கிரிக்கட் சபையின் தலைவர் டேவ் கெமரனை சிக்கலுக்குள் தள்ளும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சபையின் நிர்வாகக்குழு தேர்தல் வருகின்ற நிலையில், அவருக்கு இது பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts: