மேற்கிந்திய அணியில் மீண்டும் கைல்!

Sunday, September 3rd, 2017

செப்டெம்பர் 16அன்று இடம்பெறவுள்ள ,இங்கிலாந்து அணிக்கு எதிரான ரீ20 ஆட்டத்தில், புயல் ஆட்டக்காரர் கிரிஸ் கைல் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுகிறார்.

இவருடன் துடுப்பாட்ட வீரரான மார்லன் சமுவேல்சும் இணைந்து கொளவதாக செய்திகள் வெளிவந்துள்ளன . இந்த அணிக்கு தலைமை தாங்க கார்லோஸ் பிரத்வைட் நியமிக்கப்பட்டுள்ளார் .

சுழல் பந்து வீச்சாளர்  சுனில் நரின் , பன்முக ஆட்டக்காரர் பொலார்ட் ஆகிய இருவரும் 13பேர் அடங்கிய குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர் .ரீ20 உலக சம்பியன்களாக திகழும் மேற்கிந்திய அணி தனது இறுதி நான்கு  ரீ20 மோதல்களிலும் வென்றுள்ளது

இறுதியாக இந்த இரு அணிகளும் கடந்த வருடம் ஏப்ரில் மாதத்தில் கொல்கத்தாவில் மோதிக்கொண்டன.இந்த மோதலின்போது கார்லோஸ் பிரத்வைட், இங்கிலாந்தின் பந்துவீச்சாளர் ஸ்டோக்சின் நான்கு அடுத்தடுத்த பந்துகளுக்கு நாக்கு சிச்சர்கள் அடித்து , மேற்கு இந்திய அணிசாம்பியனாக வழி வகுத்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது

Related posts: