மேற்கிந்தியத் தீவுகள்-இலங்கை இடையேயான டெஸ்ட் தொடருக்கு இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி!

Wednesday, November 24th, 2021

மேற்கிந்தியத் தீவுகள்-இலங்கை இடையேயான டெஸ்ட் தொடருக்கு இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையி லான டெஸ்ட் தொடருக்கு இன்று முதல் பார்வை யாளர்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய, கிரிக்கெட் மைதானத்தில் இருக்கை கொள்ளளவில் 50 வீதமான பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேலும், போட்டியைக் காண வரும் பார்வையாளர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கு ஆதாரமாகத் தடுப்பூசி அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டியைப் பார்க்க விரும்பும் அனைத்துப் பார்வையாளர்களும் மைதானத்துக்குள் நுழைவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்தியிருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

00

Related posts: