மெஸ்ஸியை விட ரொனால்டோ சிறந்த வீரர்!

Thursday, May 19th, 2016

மெஸ்ஸியை விட ரொனால்டோ தான் சூழ்நிலைக்கு ஏற்ற கால்பந்தாட்ட வீரர் என மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புகழ்பெற்ற முன்னாள் பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தில் நடந்த கோல்ப் விளையாட்டு குறித்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பெர்குசன் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, கால்பந்து விளையாட்டில் தற்போது சிறந்து விளங்கும் இரண்டு சாதனையாளர்களை குறித்து அவர் ஆய்வு செய்தார்.

சமீப காலங்களில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

2009-ம் ஆண்டு முதல் லா லிகா தொடரில் ரொனால்டோ அல்லது மெஸ்ஸி தான் அதிக கோல் அடித்து வருகின்றனர்.

லா லிகாவில் சிறப்பு மிக்க போர்த்துகீசிய நட்சத்திர ஆட்டக்காரரான ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரியல்மாட்ரிட் அணியில் சேர்ந்துள்ளார்.

மெஸ்ஸி ஒரு அற்புதமான வீரர், அவர் பந்தை கட்டுப்படுத்தும் போது அவர் காலணிகள் அணிந்தது போல் தான் இருக்கும்,

ஆனால், என்னை பெறுத்த வரை மெஸ்ஸிக்கும்,ரொனால்டோவிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

மெஸ்ஸி ஒரு பார்சிலோனா வீரர், ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் லிவர்பூல் உள்ளூர் அணிக்காக விளையாடி ஒரு ஹாட்ரிக் கோல் அடிக்க முடியும்.

ரொனால்டோவிடம் அனைத்து வகையான திறமையும் உண்டு, அவரால் இரண்டு கால்களை கொண்டு பந்தை வலுவாக உதைக்க முடியும், பந்தை தலையால் கட்டுபடுத்த முடியும், ஒரு சிங்கத்தின் தைரியம் அவரிடம் உள்ளது என பெர்குசன் கூறியுள்ளார்.

ரொனால்டோ, பெர்குசனின் முன்னாள் சீடன் என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த 2003 முதல் 2009 வரை மான்செஸ்டர் அணியில் விளையாடிய ரொனால்டோ பெர்குசன் கீழ் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: