மெஸ்ஸியின் சீரடை அணிந்தது குற்றமா?

Wednesday, September 21st, 2016
 
தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மக்களை கால்பந்து விளையாட்டு விளையாடக்கூடாது என்று ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதனை மீறி அவர்கள் கால்பந்து விளையாட்டு விளையாடினாலோ அல்லது விளையாட்டு வீரர்களின் சீருடையை அணிந்தாலோ அவர்களுக்கு தங்க தண்டனை வழங்கப்படும் என அறிவுறுத்ததப்பட்டுள்ளது. ஏனெனில், கால்பந்து விளையாட்டின் மீது இவர்கள் அதிக ஆர்வம் செலுத்தினால், நாளடைவில் அந்த விளையாட்டிற்கு அடிமையாகி அதன் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவர்.
இதன் காரணத்தினாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் ஈராக்கின் மொசூல் நகரை சேர்ந்த 3 வாலிபர்கள் கால்பந்து விளையாடியுள்ளனர், அதில் ஒரு வாலிபர், அர்ஜெண்டினா கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸியின் டிசர்ட்டை அணிந்துள்ளார்.
இது தீவிரவாதிகளை உச்சகட்ட கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது, இதன் காரணமாக அந்த மூன்று வாலிபர்களையும் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து சவுக்கடி கொடுத்துள்ளனர். மேலும், இனிமேல் மெஸ்ஸியின் டிசர்ட்டை அணியக்கூடாது என எச்சரித்துள்ளனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: