மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை!

Wednesday, July 6th, 2016

அர்ஜன்டீனா கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வரி மோசடி காரணமாக குறித்த அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2007 முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வரி மோசடி செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸிக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் மில்லியன் கணக்கான யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் சிறைத்தண்டனை அனுபவிப்பதிலிருந்து தம்மைத் தவிர்த்துக் கொள்வார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாம் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்ததால், தனது நிதி விவகாரம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை என லயனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

Untitled-1 copy

Related posts: