மெஸ்ஸிக்கு அபராதம் – போட்டியில் விளையாடவும் தடை!
Thursday, July 25th, 2019உலகின் தலைசிறந்த நட்சத்திர வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை மற்றும் 1,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கோபா அமெரிக்கா தொடரில் மூன்றாம் இடத்திற்கான பிளேஆப்பில் சிலி-அர்ஜென்டினா அணிகள் மோதின.
குறித்த போட்டியின் போது சிலி வீரர் கேரி மெடலுக்கும், மெஸ்ஸிக்கு மோதல் ஏற்பட்டதையடுத்து மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
போட்டிக்கு பின் பேசிய மெஸ்ஸி, இத்தொடர், போட்டியை நடத்தும் பிரேசிலுக்கு ஆதரவாக நிர்ணயிக்கப்பட்டதாக மெஸ்ஸி குற்றம்சாட்டினார்.
தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பான CONMEBOL தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த மெஸ்ஸி, அவரது பதக்கத்தை வாங்கவும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
மெஸ்ஸியின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் உலகளவில் ஐந்து முறை ஆண்டின் சிறந்த வீரர் பட்டத்தை வென்றுள்ள மெஸ்ஸிக்கு கடுமையான தடையை விதிப்பதில் இருந்து பின்வாங்குகிறோம் என இதுகுறித்து CONMEBOL தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு போட்டியில் விளையாட தடை மற்றும் 1,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த தடை 2022 உலகக் கோப்பைக்கான அர்ஜென்டினாவின் முதல் தகுதிப் போட்டியில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|