மெஸ்சி முக்கியமானவர்- அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம்!

Saturday, July 28th, 2018

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீக் சுற்றில் குரோஷியாவிற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால், நாக்அவுட் சுற்றில் பிரான்ஸை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதில் 2-4 எனத் தோல்வியடைந்து காலிறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இதனால் நட்சத்திர வீரர் மெஸ்சி மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதனால் அவர் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், உலகக்கோப்பை தோல்விக்குப் பின் மெஸ்சி ஏதும் பேசாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நிதி கண்ணோட்டத்தில் மெஸ்சி எங்களுக்கு முக்கியமானவர் என்று அர்ஜென்டினா கால்பந்து அசோசியேசன்ஸ் தலைவர் கிளாடியோ தபியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிளாடியோ தபியா கூறுகையில் ‘‘உணர்ச்சி ரீதியாக இந்த தோல்வி அவருக்கு மிகப்பெரிய அடியாகும். ஆனால், அர்ஜென்டினாவிற்கு அவர் தேவை. நிதி கண்ணோட்டத்தில் மெஸ்சி அர்ஜென்டினாவிற்கு முக்கியமானவர்.

மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர் அர்ஜென்டினா தேசிய அணியை மிகவும் நேசிக்கிறார். நாங்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.

Related posts: