மெஸ்சியின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்ற பார்சிலோனா!

Saturday, March 17th, 2018

சாம்பியன்ஸ் லீக் தொடரில், மெஸ்சியின் அபார ஆட்டத்தினால் செல்சி அணியை வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சாம்பியன்ஸ் லீக்கில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில், பார்சிலோனா மற்றும் செல்சி அணிகள் மோதின. நேற்றிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில், மெஸ்சி கொடுத்த pass-யை ஓஸ்மானே டெம்ப்ளே சிறப்பான வகையில் கோலாக மாற்றினார்.

இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா அணி 2-0 என முன்னிலைப் பெற்றது. எனினும், செல்சி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். ஆனால், பார்சிலோனாவின் தடுப்பாட்ட வீரர்கள் மற்றும் கோல் கீப்பரின் தடுப்பினால், செல்சி வீரர்களால் கோல் போட முடியவில்லை. மிரட்டலான ஆட்டத்தினை இரண்டாவது பாதியிலும் தொடர்ந்த மெஸ்சி, ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்தார்.

ஆனால், கடைசி வரையிலும் செல்சி வீரர்களினால் பதில் கோல் அடிக்க முடியவில்லை என்பதால், 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. இதற்கு முன்பு, செல்சி அணிக்கு எதிரான 8 ஆட்டங்களில் மெஸ்ஸி கோல் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: