மெய்வல்லுனர் விளையாட்டுகள் அழிவடையும் – உசைன் போல்ட்!

Thursday, August 3rd, 2017

மெய்வல்லுனர்கள் மத்தியில் ஊக்கமருந்து பாவனை இல்லாது செய்யப்பட வேண்டும் என்று குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்

அல்லாத பட்சத்தில் மெய்வல்லுனர் விளையாட்டுகள் அழிவடைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.இலண்டனில் எதிர்வரும் வெள்ளிக் கிழமை முதல் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஸிப் மெய்வல்லுனர் தொடரில் 100 மீற்றர் மற்றும் 100 மீற்றர் அஞ்சல் ஓட்டம் ஆகிய போட்டிகளில் உசைன்போல்ட் கலந்து கொள்ளவுள்ளார்.

அவரது இறுதி போட்டிகளாக இவை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த நிலையிலேயே அவர் லண்டன் ஊடகம் ஒன்றுக்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்மெய்வல்லுனர் போட்டிகளை முன்கொண்டு செல்வதற்கு வீரர்கள் நடைமுறை அறிந்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: