மெய்வல்லுனரகளுக்கு விசேட மாதாந்தக் கொடுப்பனவு!

Monday, November 6th, 2017

தேசிய பயிற்றுவிப்பு அமைப்பில் தகுதி பெறும் அனைத்து மெய்வல்லுனர் வீர வீராங்கனைகளுக்கு விசேட மாதாந்தக் கொடுப்பனவை வழங்கப்படவுள்ளது.

தற்போது விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள மெய்வல்லுனர் வீர வீராங்கனைகளுக்கு கடந்த தேசிய மற்றும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் வெளிப்படுத்தியுள்ள ஆற்றலுக்கு அமைவாக வகைப்படுத்தி, இந்தக் கொடுப்பனவு வழங்கப்படு மென்று விளையாட்டுத் துறைப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் தரம் மற்றும் ஆசிய விளையாட்டுத் தரம் மற்றும் தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டியுள்ள சிரேஷ்ட வீர வீராங்கனைகள் இந்த வகைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்

Related posts: