மெய்வன்மை போட்டிகளை ஜனவரி 30 ஆம் திகதிக்குள் நடத்திமுடிக்குமாறு அறிவிப்பு!

Friday, January 19th, 2018

வடக்கு மாகாணப் பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதிக்குள் இல்ல மெய்வன்மைப் போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணப் பாடசாலைகளின் நடப்பு ஆண்டுக்கான இல்ல மெய்வன்மைப் போட்டிக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகள் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாகும். புhடசாலை மட்டப் போட்டிகளில் வெற்றிபெறுபவர்கள் அதன் தொடர்ச்சியாக வலயம், மாகாணம், தேசியம் என்று பிரகாசிக்கக்கூடிய சந்தரப்பங்கள் உண்டு. ஆகவே இந்தப் போட்டிகளுக்கான பயிற்சிகள் தற்பொழுது பாடசாலைகளில் காலையிலும், மாலையிலும் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டிகளை ஜனவரி மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்ய வேண்டும். தவணைப் பரீட்சைகள் மற்றும் வலயமட்டப் போட்டிகளைக் கருத்தில் கொண்டு மேல்குறிப்பிட்ட திகதிக்குள் போட்டிகளை முடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: