மெதடிஸ்த பெண்கள் மாவட்டச் சம்பியன்!

4-methadi Wednesday, June 13th, 2018

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் 19 வயது பெண்கள் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த அணி மாவட்டச் சம்பியனானது.

கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் இந்த இறுதியாட்டம் இடம்பெற்றது. பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையும் தெல்லிப்பழை மகாஜன கல்லூரியும் பலப்பரீட்சை நடத்தின.

மூன்று செற்களைக் கொண்ட ஆட்டத்தின் முதலிரு செற்களையும் முறையே 25:18, 25:17 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி 2:0 என்ற செற் கணக்கில் நேர்செற் வெற்றிபெற்றது பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி.