மெதடிஸ்த பெண்கள் பூப்பந்தில் சம்பியன்!

Wednesday, June 20th, 2018

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பூப்பந்தாட்டத் தொடரில் 20 வயதுக்குட்பட்ட பிரிவு பெண்கள் பிரிவில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை அணி கிண்ணம் வென்றது

மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியும் பல பரீட்சை நடத்தின.

மூன்று தனிநபர் ஆட்டங்களையும் இரண்டு இரட்டையர் ஆட்டங்களையும் கொண்டதாக இறுதியாட்டம் அமைந்தது.

முதல் இரண்டு ஒற்றையர் ஆட்டங்களையும் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியைச் சேர்ந்த ராகவி, சாருகா இருவரும் முறையே 2:0, 2:1 என்ற செற் கணக்கில் தமதாக்கினர். மூன்றாவது ஒற்றையர் ஆட்டத்தை இந்து மகளிரின் வீராங்கனை பிரசாந்தினி 2:0 என்ற செற் கணக்கில் தனதாக்கினார்.

இரட்டையர் ஆட்டத்தில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலாவது இரட்டையர் ஆட்டத்தில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையின் வீராங்கனைகள் பவித்ரா, சாருகா இணையை எதிர்த்து இந்து மகளிரின் வீராங்கனைகள் கம்சாயினி, தமிழினி இணை மோதியது. 2:0 என்ற செற் கணக்கில் மெதடிஸ்த பெண்கள் இணை வென்றதையடுத்து ஒட்டுமொத்தமாக 3:1 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி.

Related posts: