மெக்சிகோ கார் பந்தயத்தில் ஹமில்டன் வெற்றி!

மெக்சிகோ சிட்டியில் நடந்த கார் பந்தய போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிங் ஹமில்டன் வெற்றி பெற்றார்.
கார்ப் பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்து பெற்றது போமியுலா-01 கார்பந்தயம் ஆகும். இந்த ஆண்டுக்கான ‘போமியுலா- −01 கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
இதன் 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட் பிரீ பந்தயம் மெக்சிகோ சிட்டியில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிங் ஹமில்டன் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 40.31 நிமிட நேரத்தில் கடந்தார்.
இந்த பரிவகாலத்தில் ஹமில்டன் பெற்ற 8-வது வெற்றியாகும். மொனாகோ, கனடா, ஆஸ்திரியா, இங்கிலாந்து, ஹங்கேரி, ஜெர்மனி, அமெரிக்கா போட்டிகளில் அவர் வெற்றி பெற்று இருந்தார்.
ஜெர்மனி வீரர் ரோஸ்பெர்க் 2-வது இடத்தையும், டேனியல் ரிக்கார்டோ (அவுஸ்திரேலியா) 3-வது இடத்தையும் பிடித்தனர்.
19 சுற்றுகள் முடிவில் ரோஸ்பெர்க் 349 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். 2 முறை சம்பியனான (2014, 2015) ஹமில்டன் அவருக்கு அடுத்தப்படியாக 19 புள்ளிகள் பின் தங்கிய நிலையில் உள்ளார். ஹமில்டன் 330 புள்ளியுடன் இருக்கிறார்.
இன்னும் 2 சுற்றுகள் எஞ்சியுள்ளன. இதனால் ‘போமியுலா-01’ சம்பியன் பட்டத்தை வெல்ல ரோஸ்பெர்க், ஹமில்டன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 242 புள்ளிகளுடன் டேனியல் ரிக்கார்டோ 3-வது இடத்தில் உள்ளார்.
20-வது சுற்றான பிரேசிலியன் கிராண்ட் பிரீ பந்தயம் வருகிற 13-ம் திகதி நடக்கிறது.
Related posts:
|
|