மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற காலெப் டிரஸ்செல்!

அமெரிக்க நீச்சல் வீரரான காலெப் டிரஸ்செல் இரண்டு மணி நேரங்களில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்
ஹங்கேரியின் நடைபெற்றுவந்த உலக நீச்சல் வெற்றிக் கிண்ண போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்த போட்டிகளில, அமெரிக்க நீச்சல் வீரர் காலெப் ட்ரஸ்செல், 50 மீட்டர் ப்ரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்பிளை, 4 ஒ 100 மீட்டர் பிரீஸ்டைல் கலப்பு பிரிவு ஆகிய பந்தயங்களில் அடுத்தடுத்து பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
இரண்டு மணி நேரத்தில் மூன்று போட்டிகளிலும் பங்குபற்றிய 20 வயதான டிரஸ்செல், உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே இரவில் 3 தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஏற்கனவே, இவர், 100 மீட்டர் பிரீஸ்டைல், 4 ஒ 100 மீட்டர் மெட்லே கலப்பு, 4 ஒ 100 மீட்டர் பிரீஸ்டைல் ஆகிய பிரிவுகளிலும் அவர் தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|