மூன்று ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்ற ஜோகோவிச்!

Saturday, November 19th, 2016

 

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்று ஆட்டங்களில் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார். முதல் -8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் வியாழன் நடந்த ஒரு லீக்கில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 7-6 (3), 7-6 (3) என்ற நேர் செட்டில் மரின் சிலிச்சை (குரோஷியா) வீழ்த்தி அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டார்.

ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) தன்னை எதிர்த்த நிஷிகோரியை (ஜப்பான்) 6-7 (9), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பை நெருங்கினார். மற்றொரு பிரிவில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) தனது கடைசி லீக்கில் டேவிட் கோபினை (பெல்ஜியம்) சந்தித்தார்.

மான்பில்ஸ் (பிரான்ஸ்) காயத்தால் விலகியதால் கடைசி நேரத்தில் மாற்று வீரராக இறக்கப்பட்ட கோபினை 6-1, 6-2 என்ற நேர் செட்டில் ஜோகோவிச் பந்தாடினார். தனது பிரிவில் மூன்று ஆட்டங்களிலும் வெற்றியை சுவைத்த ஜோகோவிச் ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி விட்டார்.

a40e78col114442016_5022884_18112016_aff_cmy

Related posts: