மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி!

இலங்கை – தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆபிரிக்க அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி 50 ஓவர் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களையும் இழந்து 35 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
பின்னர் போட்டி 24 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 193 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இருப்பினும் இலங்கை அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 121 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
Related posts:
உலக கிண்ணம் - கோலுக்காக 63 கி.மீ. ஓடிய வீரர்!
கிரிக்கெட் அணியிடம் நட்டஈடு கோரியுள்ள ஹத்துருசிங்க!
சமநிலையில் முடிவுற்றது இந்துக்களின் பெரும்சமர் !
|
|