மூன்றாவது போட்டியிலும் சிம்பாவே அணியை வென்றது இந்தியா!

Thursday, June 16th, 2016

சிம்பாவே அணிக்கெதிரான  மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அணி வெற்றிப்பெற்று சிம்பாவே அணியை 3-0 என வைட் வொஷ் முறையில் வெற்றிக்கொண்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற 3 ஆவது போட்டியில் 124 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 21.5 பந்து ஓவர்களில் விக்கட் இழப்பின்றி வெற்றியை பதிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணியினர் 42.2 பந்து ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.

சிம்பாவே அணி சார்பாக சிபண்டா 38 ஓட்டங்களையும், சிபாபா 27 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

124 என்ற இலக்கை இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ராஹுல் மற்றும் பஷால் ஆகிய இருவரும் நிறைவு செய்து வைத்தனர்.

ராஹுல் 63 ஓட்டங்களையும், பஷால் 55 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பும்ரா தெரிவு செய்யப்பட்டதோடு, தொடராட்ட நாயகனாக ராஹுல் தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: