மூன்றாவது சுற்றில் ஆண்டி முர்ரே!

Friday, July 7th, 2017

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், நடப்பு சம்பியனான இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஆண்டி முர்ரே, டஸ்டின் பிரவுனை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில், ஆண்டி முர்ரே ஜேர்மனியின் டஸ்டின் பிரவுனை எதிர்கொண்டார். இதில் முர்ரே 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பிரவுனை எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.

இதேபோல் முன்னணி வீரர்களான குரோஷியாவின் மரின் சிலிச், ஜப்பானின் நிஷிகோரி, பிரான்சின் சோங்கா ஆகியோரும் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Related posts: