முஸ்தபிர் ஆவேசம்!

sabir-mush Wednesday, October 11th, 2017

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வங்கதேச அணி, மிக மோசமாக இழந்ததால், அந்த அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில் வங்கதேச அணியின் ஆட்டம் மிக மோசமாக இருந்தது.

இந்நிலையில் வங்கதேசத்தின் அணித்தலைவரான முஷ்பிகுர் ரஹிம், அணி நன்றாக ஆடும்போது, அதற்கான பெருமை முழுதையும் அணி நிர்வாகம் தட்டிச் செல்கிறது. ஆனால் நன்றாக ஆடாத போது பழி அத்தனையும் அணியின் தலைவர் மீது சுமத்தப்படுகிறது.நான் இதை ஏற்றுக் கொள்கிறேன் மறுக்கவில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் ஆடிய ஆட்டங்களில், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியில் தான் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டோம்.அதற்கு காரணம் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வென்றும் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது தான் என்று கூறுகிறார்கள். நானும் மனிதன் தானே, தவறுகள் செய்வது இயல்பு தானே, இதனால் நான் என் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்


ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைக்கப்படுமா?
இலங்கை ‘ஏ’ அணி வலுவான நிலையில்!
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கிரக்கட் வீரர்களின் முகவர்கள் - விளையாட்டுத்துறை அமைச்சர்!
கால்பந்து போட்டியில் சாதித்துக் காட்டிய யாழ்ப்பாண மாணவிகள் !
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 16 நாடுகள் நான்கு குழுக்களில் போட்டியிடும்!