முழுமையாக தொடரை இழந்த இலங்கை அணி!
Wednesday, July 6th, 2016இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சவுத் அம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 140 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 17.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக தனுஷ்க குணதிலக்க 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஜோர்தன் மற்றும் லியாம் டோவ்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
141 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பில் பட்லர் 49 பந்துகளில் 73 ஓட்டங்களைக் குவித்தார். மேலும் அணித்தலைவர் மோகன் 47 ஓட்டங்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் விளையாடிய எந்தவொரு போட்டியிலும் வெல்லாது இலங்கை அணி இந்த தொடரை நிறைவு செய்துள்ளது.
Related posts:
|
|