முல்லை மாவட்டச் செயலகம் கிண்ணம் வென்றது!

Friday, December 8th, 2017

முல்லைத்தீவு மாவட்டசெயலர் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட கால்ப்பந்தாட்டத் தொடரில் மாவட்டச் செயலக அணி கிண்ணம் வென்றது.

முல்லைத்தீவு முற்றவெளி மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட தபால் திணைக்கள அணியை எதிர்த்து முல்லைத்தீவு மாவட்ட செயலக அணி மோதியது.

ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் கடுமையாகப் போராடிய போதிலும் கோல் எதையும் பதவு செய்ய இயலவில்லை. கோல் கணக்கு இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல்பாதி. இரண்டாம் பாதியிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை. சமநிலை தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முடிவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக அணி 4:1 என்ற கோல் வெற்றி பெற்றது.

Related posts: