முற்றுகிறதா கோஹ்லி-ரோஹித் சண்டை?

Saturday, August 3rd, 2019

இந்திய அணியின் கேப்டன் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் டிவிட்டர் பக்கத்தில், இளம் வீரர்கள் ராகுல் மற்றும் சாஹல் ஆகியோர் பின் தொடர்வதால் கோஹ்லி-ரோஹித் இடையிலான மோதல் முற்றுவதாக தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடையிலான மோதல் போக்கு, சக வீரர்களின் செயல்பாடுகளில் வெளிப்படுவதாக கூறப்படுகிறது.

கோஹ்லிக்கு ஆதரவாக சில வீரர்களும், ரோஹித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் சகவீரர்களுடன் இருக்கும் புகைப்படங்களை கோஹ்லி-ரோஹித் வெளியிட்டது, அவர்களுக்கிடையேயான விரிசலை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அமைந்தது.

முன்னதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோஹ்லி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவை பின் தொடர்ந்து வந்த ரோஹித் ஷர்மா, திடீரென்று அவர்களை பின் தொடர்வதில் இருந்து வெளியேறினார். அதேபோல் ரோஹித்தின் மனைவியும் அனுஷ்காவை பின் தொடர்வதில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் இளம் வீரர்களான ராகுல் மற்றும் சாஹல் இருவரும், அனுஷ்கா ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை புதிதாக பின் தொடர்கின்றனர். இதன்மூலம் அவர்கள் இருவரும் கோஹ்லிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிகிறது. இதனை சுட்டிக்காட்டி, கோஹ்லியின் ரசிகர்கள் சிலர் ரோஹித்தை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

கடந்தாண்டுகளில் மோசமாக ஆடிய ராகுலுக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்து வந்தது. அதேபோல் கோஹ்லி கேப்டனாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடுபவர் சாஹல் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்கள் இருவரின் இந்த செயல், ரோஹித்துக்கு எதிராக நடவடிக்கையை இன்னும் பெரிதாக்குவதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Related posts: