முரளி விஜய் – ஷா அதிரடி- பஞ்சாப்பிடம் வீழ்ந்தது மும்பை!
Sunday, May 15th, 2016முரளி விஜய் மற்றும் ஷா ஆகியோர் அதிரடி காட்ட பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது மும்பை அணி.ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சாண்ட் ஆகியோர் களமிறங்கினர். இதில் சாண்ட் ஓட்டமேதும் பெறாத நிலையில் ஆட்டமிழக்க அடுத்து களம்புகுந்தார் ராயுடு. இவரும் வந்த வேகத்திலேயே வெளியேற, மும்பை அணி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.
அதன்பிறகு வந்த ராணா ரோஹித்துடன் ஜோடி சேர்ந்து ஓட்டங்களைப் பெற்றார். இதன்போது ரோஹித் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பட்லரும் 9 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். ராணா25 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
அதற்கடுத்து வந்த பொல்லார்ட்(27), பாண்டியா (19), ஹர்பஜன் சிங்(14) என சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் மும்பை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 125 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இதில் அணித் தலைவர் முரளி விஜய் 54 ஓட்டங்களை யும், ஷா 56 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதில் அம்லா மற்றும் மெக்ஸ்வல் ஆகியோர் ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தியது.
Related posts:
|
|