முரளியின் சாதனையை சமன் செய்யக் காத்திருக்கும் இலங்கையின் இளம் வீரர்!

Tuesday, July 17th, 2018

டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ஓட்டங்களுடன் 100 விக்கெட்களை வீழ்த்திய இலங்கை வீரர் என்ற மைக்கல்லை எட்ட தில்ருவன் பெரேராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியின் மூன்று வீரர்கள் இதுவரை இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடன் 1261 ஓட்டங்களையும் ரங்கன் ஹெரத் 423 விக்கெட்களுடன் 1645 ஓட்டங்களையும் சமிந்த வாஸ் 355 விக்கெட்களுடன் 3089 ஓட்டங்களையும் இதுவரை எடுத்துள்ளனர்.

இந்த வரிசையில் இணைய தில்ருவன் பெரேராவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது அவர் 119 விக்கெட்களையும் 975 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

இன்னும் 25 ஓட்டங்களை எடுத்தால் 1000 ஓட்டங்களை பெற்று இந்த பட்டியலில் பெரேரா இணைந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: