மும்பை அணிக்கு மீண்டும் திரும்பிய மலிங்கா!

Friday, April 12th, 2019

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, ஐ.பி.எல் தொடரில் இருந்து பாதியில் வெளியேறினார்.

இதனால் ஹைதராபாத் அணியுடனான கடந்த போட்டியில், மலிங்காவுக்கு பதிலாக அல்ஜாரி ஜோசப் அறிமுக வீரராக களமிறங்கினார். அந்தப் போட்டியில் அவர் 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடக்கும் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்காக மலிங்கா தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

ஆனால், இந்தப் போட்டியை முடித்தவுடன் மீண்டும் நாளை இலங்கையில் நடக்க உள்ள போட்டிக்காக, விடியற்காலை மும்பையில் இருந்து மலிங்கா புறப்படுவார் என்று கூறப்படுகிறது.