முன்னேற்றமடையாவிட்டால் பதவி விலகுவேன் – ஜெயவர்தனே!

இலங்கை கிரிக்கெற் அணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படாவிட்டால் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அணியை முன்னேற்ற அந்நாட்டு விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா சிறப்பு ஆலோசனை குழு ஒன்றை அமைத்துள்ளார்.
குழுவில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் ஜெயவர்தனே, சங்ககாரா, அரவிந்த டி சில்வா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து ஜெயவர்தனே கூறுகையில், கடந்த ஒருவருடத்தை நான் வீணடித்துவிட்டேன்.ஆலோசனை குழு மூலம் நாங்கள் முன்மொழியும் விடயங்கள் இலங்கை அணிக்கு உதவும் என நம்புகிறேன்.இது தான் என்னுடைய கடைசி முயற்சி, நாங்கள் எதிர்ப்பார்த்த முன்னேற்றத்தை இலங்கை அணி அடையாவிட்டால் நிச்சயம் பதவி விலகி விடுவேன் என கூறியுள்ளார்
Related posts:
தலைமைத்துவம் அற்றவர் டெய்லர்- மக்கலம்!
மலிங்கவை விட வேகமாக பந்து வீசுவென் - சவால் விடும் விஜயராஜ்!
பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக சுனில் ஜோஷி!
|
|