முன்னேற்றம் கண்ட ரங்கன ஹேரத்!

254329 Sunday, July 16th, 2017

இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கிடையில் தற்போது இடம்பெற்றுவரும் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 356 ஓட்டங்களைப் பெற்றது.

இப்போட்டியில் பந்துவீசிய இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் 116 ஓட்டங்களுக்கு 05 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்

அதன்படி, ரங்கன ஹேரத் தான் இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கட்டுக்களை 30 முறை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.மேலும் , அதிகமுறை ஐந்து விக்கட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ரங்கன ஹேரத் தற்போது 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதில் , முதல் இடத்தில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் காணப்படுகிறார்.அவர் 5 விக்கட்டுக்களை 67 முறை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இரண்டாம் இடத்தில் ஷேன் வோர்னும் , மூன்றாவது இடத்தில் ரிசட் ஹெட்லியும் மற்றும் நான்காவது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளேயும் காணப்படுகின்றனர்.இந்த வரிசையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 9 வது இடத்தை பெற்றுள்ளார்