முன்னிலையில் இந்திய அணி!

Sunday, October 2nd, 2016

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் 3ஆம் நாள் முடிவில், இந்திய அணி முன்னிலையைப் பெற்றுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 7 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, 204 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 9ஆம் நிலை வீரரான ஜீதன் பட்டேல், பெற்ற வேகமாக ஓட்டங்கள், நியூசிலாந்துக்கு ஓரளவு கௌரவத்தினை வழங்கின.

துடுப்பாட்டத்தில் ஜீதன் பட்டேல் 47, றொஸ் டெய்லர் 36, லூக் றொங்கி 35 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 5, மொஹமட் ஷமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.112 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில், தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இன்றைய நாள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி சார்பாக, றோகித் ஷர்மாவும் ரிதிமான் சகாவும், 103 ஓட்ட இணைப்பாட்டத்தைப் புரிந்தனர்.

துடுப்பாட்டத்தில் றோகித் ஷர்மா 82, விராத் கோலி 45, ரிதிமான் சகா ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மற் ஹென்றி, மிற்சல் சான்ட்னெர் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் ட்ரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்படி, 2 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில், இந்திய அணி 339 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது.

InSharma_02102016_GPI

Related posts: