முன்னாள் வீரர்கள் மீண்டும் களத்தில்!
Sunday, January 21st, 2018உலக புகழ்பெற்ற கிரிக்கட் வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கட் போட்டி பெப்ரவரி மாதம் சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் அமைந்துள்ள செயின்ட் மோரிட்ஸ் ரிசார்ட் பகுதியில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதற்கு சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதி அளித்துள்ளது.
இதற்கமைய, இந்த தொடரில் விளையாடவுள்ள ராயல்ஸ் அணியின் சார்பில் எடம் ஸ்மித், சொயிப் அக்தர், ட்வயன் பிராவோ, அப்துல் ரசாக், மேட் பிரையர், நாதன் மெக்கல்லம், டேனியல் வெட்டோரி, கிராண்ட் எலியட், சஹிட் அப்ரிடி, உவாயிஸ் ஷா போன்ற வீரர்களும்
டயமண்ட்ஸ் அணி சார்பில் வீரேந்திர ஷேவாக், ஜாகீர் கான், அஜித் அகர்கர், மஹேல ஜெயவர்தனே, திலக்கரத்ன தில்சான், லசித் மாலிங்க, மைக்கல் ஹசி, முகமது கயுப் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Related posts:
|
|