முன்னாள் காற்பந்து வீரருக்கு எதிராக குற்றவியல் விசாரணை!

Friday, September 2nd, 2016

ஜேர்மனியின் முன்னாள் காற்பந்து வீரர் ஃப்ரான்ஸ் பெகென் போருக்கு எதிராக குற்றவியல் சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள் இந்த விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர் 2006ம் ஆண்டு உலக கிண்ண காற்பந்தாட்ட போட்டிகளை நடத்துவதற்கான வாக்கெடுப்பில் மோசடிகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றமை தொடர்பில் இந்த விசாரணை இடம்பெறுகிறது.

மோசடி, குற்றவியல் மோசடிமுகாமைத்துவம், பணச்சலவை மற்றும் துஸ்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.அத்துடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சில சம்பவங்கள், சுவிட்சார்லாந்திலேயே இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும்,  இந்த குற்றச்சாட்டை பெகென்போர் மறுத்துவருகிறார்.

timthumb

Related posts: