முத்திரை பதித்த முகமது ஷமி!

Sunday, July 24th, 2016

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயம் காரணமாக கிட்டத்தட்ட 1 ஆண்டுகளுக்கும் மேலாக போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்கியுள்ள முகமது ஷமி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்துள்ளார்.

அவர் பிராவோ, சாமுவேல்ஸ், பிளாக்வுட், சந்திரிகா ஆகிய முக்கியமான வீரர்களை ஆட்டமிழக்க செய்தார்.அவர் 3வது விக்கெட்டை வீழ்த்திய போது டெஸ்டில் 50வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். தனது 13வது டெஸ்டில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன் மூலம் அதிவேகத்தில் 50 விக்கெட் எடுத்த 2வது இந்தியரான வெங்கடேஷ் பிரசாத்தை (13 டெஸ்ட்) முகமது ஷமி சமன் செய்துள்ளார்.

Related posts: