முத்தரப்பு தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு?

Saturday, February 24th, 2018

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 தொடரில் கோஹ்லி தேவைப்பட்டால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இலங்கை, வங்கதேசம், இந்தியா பங்குபெறும் மூன்று நாடுகளுக்கிடையேயான முத்தரப்பு தொடர் இலங்கையில் அடுத்த மாதம் 6-ஆம் திகதி துவங்கவுள்ளது.

இதில் இந்திய அணி பயிற்சி போட்டி விளையாடாமல் நேரடியாக போட்டியில் விளையாடப் போவதாகவும், வங்கதேசம் அணி பயிற்சி போட்டியில் விளையாடப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி தேவைப்பட்டால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதும், ஓய்வில் இருப்பதும் அவருடைய விருப்பம் எனவும், எதிர் வரும் தொடர்களை கருத்தில் கொண்டே பிசிசிஐ இதை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், பூம்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக உடன்கட் மற்றும் தாகுர் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரில் தெரிவு செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts: