முதல் வெற்றியை ருசித்தது மெக்ஸிகோ!

Tuesday, June 7th, 2016

45வது கோபா அமெரிக்கா கால்பந்து திருவிழா கடந்த ஜூன் 3ம் திகதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது.

இத்தொடரில் ‘சி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் உருகுவேவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மெக்ஸிகோ.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, தென் அமெரிக்க நாடுகளில் பிரபலம் வாய்ந்ததாகும். 1916-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டி நூற்றாண்டு கொண்டாட்டத்தை எட்டியிருக்கிறது. தென் அமெரிக்க கண்டத்துக்கு வெளியே இந்த போட்டி அரங்கேறுவது இதுவே முதன்முறையாகும்.

‘ஏ’ பிரிவில் அமெரிக்கா, கொலம்பியா, கோஸ்டாரிகா, பராகுவே, ‘பி’ பிரிவில் ஹைதி, பெரு, பிரேசில், ஈகுவடார், ‘சி’ பிரிவில் ஜமைக்கா, வெனிசுலா, மெக்சிகோ, உருகுவே, ‘டி’ பிரிவில் பனாமா, பொலிவியா, அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் சிலி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

நேற்று அரிசோனாவில் உள்ள பீனிக்ஸ் பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ- உருகுவே அணிகள் மோதின.

போட்டி தொடங்கிய 4வது நிமிடத்தில் மெக்ஸிகோ அணி வீரர் ÁLVARO PEREIRA முதல் கோல் அடித்தார், இதைதொடர்நது 74வது நிமிடத்தில் உருகுவே வீரர் DIEGO GODÍN கோல் அடித்து 1-1 என போட்டியை சமன் செய்தார்.

இந்நிலையில், 85வது நிமிடத்தில் மெக்ஸிகோ வீரர் RAFA MÁRQUEZ கோல் அடித்தார், இதன் மூலம் மெக்ஸிகோ முன்னிலை பெற்றது, தொடர்ந்து மெக்ஸிகோவின் மற்றொரு வீரர் HÉCTOR HERRERA 92வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இறுதி வரை போராடிய உருகுவே வீரர்களால் மேலும் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை. போட்டியின் முடிவில் மெக்ஸிகோ அணி 3-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது

Related posts: