முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி!

Friday, September 3rd, 2021

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 118 ஓட்டங்களையும் சரித் அசலன்க 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் கேஷவ் மகராஜ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது. அந்த அணி சார்பில் எய்டன் மக்ரம் 96 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் அகில தனஞ்சய 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

Related posts: