முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 155 ஓட்டங்கள்!

Friday, March 17th, 2023

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணி சார்ப்பில் விளையாடிய டெவோன் கான்வே 78 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தனஞ்சய டி சில்வாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டொம் லதமின் விக்கெட்டை கசுன் ராஜித கைப்பற்றினார்.

முதல் நாள் முடிவில் ஆட்டமிழக்காத கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களையும், ஹென்றி நிக்கோல்ஸ் 18 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: