முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையில்

30 Friday, August 4th, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கியைடயிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேரம் முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி இன்றைய ஆட்ட நேரமுடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ஓட்டங்களை குவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி தனது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இந்திய அணி, ரஹானே மற்றும் புஜாராவின் சதத்தின் துணையுடன் இன்றைய ஆட்ட நேர முடிவில் 344 ஓட்டங்களை குவித்தது.

ஆட்டநேர முடிவில் ரஹானே 103 ஓட்டங்களுடனும், புஜாரா 128 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.