முதல் நாள் ஆட்டம்நிறைவில் இந்தியா 399 ஓட்டங்கள் குவிப்பு!

Thursday, July 27th, 2017

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று நிறைவுபெற்றது

காலி மைதானத்தில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கட்டுக்களை இழந்து 399 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் 168 பந்துகளில் 190 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், இன்றைய ஆட்டநேர முடிவில் சதீஷ்வர் புஜாரா 144 ஓட்டங்களையும், ரஹானே 39 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர்.

Related posts: